Latestமலேசியா

QR குறியீட்டை பயன்படுத்தும் வாகன ஓட்டுனர்கள், கடப்பிதழை உடன் கொண்டு வர வேண்டும் ; சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனை சாவடி ஆணையம் நினைவுறுத்தல்

சிங்கப்பூர், மார்ச் 21 – உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனை சாவடிகளில் QR குறியீட்டை பயன்படுத்தும் வாகனமோட்டிகள், தங்கள் கடப்பிதழை உடன் கொண்டு வர வேண்டுமென, ICA – சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனை சாவடி ஆணையம் நினைவுறுத்தியுள்ளது.

சில சமயங்களில், விவரங்களை சரிபார்க்க கடப்பிதழ்கள் தேவைப்படலாம் என்பதால், அதனை உடன் வைத்திருப்பது அவசியம் ஆகும்.

அதே சமயம், மலேசிய சோதனை சாவடிகளில், பயணிகளின் அடையாளத்தை சரிபார்த்துக் கொள்ள கடப்பிதழ் தேவை என்பதையும், ஓர் அறிக்கை வாயிலாக ICA தெரிவித்தது.

அதே சமயம், சிங்கப்பூருக்குள் நுழையும் வாகனமோட்டிகள், மூன்று நாட்களுக்குள், தங்கள் சிங்கப்பூர் வருகை அட்டையை இணையம் அல்லது MyICA மொபைல் அப்ளிகேஷன் வழியாகச் சமர்ப்பித்துவிட வேண்டுமெனவும் நினைவுறுதப்பட்டுள்ளது.

மார்ச் 19-ஆம் தேதி அறிமுகம் கண்ட QR குறியீட்டு முறையின் கீழ், உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் நுழைவாயில்களை பயன்படுத்தும் வாகனமோட்டிகள் இனி கடப்பிதழை பயன்படுத்த தேவையில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!