
கோலாலம்பூர், செப்டம்பர்-20,
முஸ்லீம் அல்லாதோரை kafir என இழிவாக குறிப்பிடக்கூடாது என, பாஸ் கட்சியின் 2 தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காப்பார் நாடாளுமன்ற உறுப்பினரும் பாஸ் மத்திய செயலவை உறுப்பினருமான Dr ஹலீமா அலி, மலேசியர்களின் பல்வேறு பின்னணிகளை மதிக்க வேண்டும் என்று கூறினார்.
பாஸ் முஸ்லீம் அல்லாதோரை ஒருபோதும் வெறுக்கவில்லை என்றார் அவர்.
இதற்கு முன், பாஸ் கட்சியின் ஆதரவாளர்கள் மன்றத்தின் சிலாங்கூர் கிளைத் தலைவர் கே. தீபாகரன், kafir அல்லது pendatang போன்ற சொற்களைத் தவிர்க்குமாறு அக்கட்சியினரை நினைவூட்டினார்.
மற்றொரு மத்திய செயலவை உறுப்பினரான அவாங் ஹஷிம், kafir என்ற சொல்லை மதப் பிரசங்கங்களில் பயன்படுத்தலாம், ஆனால் யாரையும் இழிவுபடுத்தக்கூடாது என்றார்.
இரு தலைவர்களும், பொது மக்களுடன் பேசும் போது மரியாதையான சொற்களைப் பயன்படுத்துவோம் என்று உறுதி தெரிவித்ததாக FMT செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்களின் இந்த ‘திடீர் ஞானோதயம்’ வரவேற்கத்தக்கது என்றாலும், இது கட்சி அளவில் ஒலிக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.