Latestமலேசியா

பினாங்கில் 100 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய அரிய வகை கனிமங்கள் கண்டு பிடிப்பு – சுந்தர ராஜூ

பினாங்கு, நவ 25 – பினாங்கில் 100 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய அரிய வகை கனிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. Teluk Bahang, Balik Pulau, Bukit Mertajam, Bukit Panchor ஆகிய 4 இடங்கள் அந்த கனிமங்கள் இருப்பது புவியியல் அறிவியல் துறையால் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்விடங்களில் 1.7 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான கதிர் இயக்கம் அல்லாத கனிமங்கள் புதைந்திருப்பதாக முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தர ராஜூ தெரிவித்திருக்கிறார். இதற்கு மேல் துல்லியமான ஆய்வுகள் மேற்கொள்ளபட வேண்டியிருப்பதாகவும், அந்த ஆய்வுக்குப் பிறகே அதை தோண்டுவதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதே சமயத்தில் அந்தக் கனிமங்கள் தோண்டி எடுப்பதனால் காடுகள், சுற்றுச்சூழல் மற்றும் நீர் வளங்கள் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்தும் ஆராயப்படும் என்றும் சட்டமன்றத்தில் லிம் குவான் என் எழுப்பிய கேள்விக்கு சுந்தர ராஜு அவ்வாறு பதிலளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!