Latestமலேசியா

டோல் கட்டணம் இறுதி முடிவு இன்னமும் நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களின் உரிமையாகும்

கோலாலம்பூர், டிச 7 – நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களுடன் செய்துகொண்ட உடன்பாடு இன்னமும் அமலில் இருப்பதால் டோல் கட்டணம் தொடர்பான இறுதி முடிவு நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களின் உரிமைக்கு உட்பட்டதாகும் என பொதுப்பணி அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்திருக்கிறார்.

எனவே, (MLFF) ‘Multi Lane Free Flow’ மல்டி லேன் இலவச ஓட்டம் சுதந்திரமான போக்குவரத்து வழித்தட திட்ட நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள தனியார் நிறுவனம் ஒன்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும் தற்போதுள்ள நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்கள் டோல் வரி வசூலிக்கும் உரிமையைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்று அலெக்சாண்டர் நந்தா கூறினார்.

இதன் அடிப்படையில், MLFF முன்முயற்சியின் சீரான தன்மையை உறுதிசெய்ய தாமும் பொதுப்பணி அமைச்சிலுள்ள குழுவினரும் இணைந்து பணியாற்றி வருகிறோம். இதனால், அது எதிர்பார்க்கப்படும் நோக்கங்களை நிறைவேற்ற முடியும் என்று அலெக்சாண்டர் நந்தா தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இந்த முயற்சிகளுக்கு பொதுப் பணி அமைச்சிடமிருந்து மட்டுமின்றி நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்கள் மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தின் உயரிய நிர்வாகத்தின் ஒத்துழைப்பும், ஆதரவும் தேவைப்படுவதாக அலெக்சாண்டர் நந்தா தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!