Latestமலேசியா

இன மற்றும் மத உணர்வுகளை தூண்டும், சமூக ஊடகங்களை போலீஸ் கண்காணிக்கிறது ; தேசிய போலீஸ் படை தலைவர் எச்சரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 29 – காலுறையில் அல்லா எனும் வாசகம் எழுதப்பட்டிருந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்விவகாரம் தொடர்பில், வேண்டுமென்றே இன மற்றும் மத உணர்வுகளை தூண்டும் சமூக ஊடக கணக்குகளை தமது தரப்பு அணுக்கமாக கண்காணித்து வருவதாக, தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.

இதற்கு முன், டத்தோ ஷுஹைலி கூறியதை போல, அவ்விவகாரம் தொடர்பான விசாரணை முடிவுக்கு வந்து விட்டது. அதனால், இனியும் அவ்விவகாரத்தை பெரிதுப்படுத்த தேவையில்லை என ரஸாருடின் கேட்டுக் கொண்டார்.

அதனால், அவ்விவகாரம் தொடர்பில், தொடர்ந்து சினமூட்டும் கூற்றுகளை வெளியிடும் அல்லது பகிரும் சமூக ஊடக கணக்குகளை போலீஸ் அணுக்கமாக கண்காணித்து வருவதாக ரஸாருடின் சொன்னார்.

முன்னதாக, அல்லா காலுறை விவகாரத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை நிறுத்துமாறு, பேரரசர் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!