Latestமலேசியா

சபா தேர்தல் சட்டமன்றம் கலைப்பு

 

கோத்தா கினபாலு, அக்டோபர்- 6,

17ஆவது சபா சட்டமன்ற தேர்தலுக்காக மாநில சட்டமன்றத்தை கலைப்பதற்கு சபா மாநில ஆளுநர் Tun Musa Aman அனுமதித்துள்ளதாக முதலமைச்சர் டத்தோஸ்ரீ Hajiji Nor அறிவித்தார்.

2019 ஆம் ஆண்டு மேலும் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான தீர்மானத்தை சபா நிறைவேற்றியதைத் தொடர்ந்து அம்மாநிலத்திற்கான சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது 60 லிருந்து 73 தொகுதிகளாக அதிகரித்துள்ளது.

Bengkoka, Mengaris, Pintasan, Pantai Dalit, Darau , Tanjung Dumpil, Dambai, Tulid , Telupid , Sungai Manila, Lamag, Segama மற்றும் Kukusan ஆகியவை அந்த 13 புதிய தொகுதிகள் ஆகும்.

எதிர்வரும் சபா மாநில தேர்தலில் அனைத்து 73 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற திடீர் மாநில தேர்லில் டத்தோஸ்ரீ Hajiji Nor தலைமையிலான சபா பெரிக்காத்தான் நேசனல், Datuk Seri Bung Moktar Radin தலைமையிலான சபா தேசிய முன்னணி ஆகியவை, அப்போதைய வாரிசான்- பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான மாநில அரசாங்கத்தை வீழ்த்தின.

அந்த தேர்தலில் Warisan 29 தொகுதிகளையும், பெரிக்காத்தான் நேசனல் 17 இடங்களையும் , தேசிய முன்னணி 14 தொகுதிகளையும் மற்றும் PBS 7 இடங்களையும் வென்றன.

மேலும் சுயேட்சை உறுப்பினர்கள் மூன்று இடங்களையும், PKR இரண்டு இடங்களையும், UPKO ஒரு இடத்தையும் வென்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!