Latestமலேசியா

மின்னியல் வாக்களிப்பை விட வாக்குச் சீட்டை முறையே வாக்காளர்களின் தேர்வு; SPR முன்னாள் துணைத் தலைவர் கருத்து

கோலாலம்பூர், ஏப்ரல்-21- மின்னியல் முறையில் வாக்களிப்பதை விட வாக்குச் சீட்டுகளில் வாக்களிக்கும் முறையையே வாக்காளர்கள் இன்னமும் விரும்புவர்.

மலேசியத் தேர்தல் ஆணையமான SPR-ரின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ வான் அஹ்மாட் வான் ஓமார் அவ்வாறு கூறுகிறார்.

மின்னியல் வாக்களிப்பு முறைக்கு மாற, நாம் பொது மக்களை நம்ப வைக்க அதிகம் செய்ய வேண்டியிருக்கும் என்றார் அவர்.

தேர்தல்களில் தொழில்நுட்பம் மற்றும் AI பயன்பாட்டை அமுல்படுத்தும் பரிந்துரை தொடர்பில் அவர் கருத்துரைத்தார்.

மின்னியல் வாக்களிப்பின் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையில் நம்பிக்கை இல்லை என்றால், தேர்தல் முடிவுகள் எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கும் என அவர் நினைவுப்படுத்தினார்.

SPR ஆக்கப்பூர்வமாகவும், வெளிப்படையாகவும், குறைந்த செலவிலும் தேர்தலை நடத்த ஏதுவாக, AI மற்றும் பிற நவீன இலக்கவியல் முறைகளைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு, மலேசிய இணையம்-பொருள்கள் சங்கம் என்ற தொழில்நுட்பக் குழு சனிக்கிழமை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது.

AI, பெரிய தரவு பகுப்பாய்வு, விவேகத் தளவாட அமைப்புகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவை தேர்தல் செயல்முறையையே உருமாற்றும் என, அதன் பொருளாளர் பத்மநாதன் முனியாண்டி கூறினார்.

எனினும், இந்த மாற்றங்களைக் கொண்டு வர கணிசமான நிதி ஒதுக்கீடும், சட்டத் திருத்தங்களும் தேவைப்படும் என, 2004 முதல் 2013 வரை SPR துணைத் தலைவராக இருந்த வான் அஹ்மாட் FMT-யிடம் கூறினார்.

மின்னணு வாக்களிப்பில் மோசடிகள் நிகழாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி, 2015-ஆம் ஆண்டில், அப்போதைய SPR தலைவர் அப்துல் அஜீஸ் யூசோஃப், அப்பரிந்துரையை நிராகரித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!