Latestமலேசியா

அன்று வீட்டு வணிகம், இன்று இரண்டாவது கிளையாக வளர்ந்து நிற்கும் VM Online Empire

ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-6 – VM Online Empire – இமிடேஷன் நகைகள், பாரம்பரிய உடைகள், VM அழகுசாதனப் பொருட்களுக்கான உங்களின் ஓரிட சேவை மையம்.

இப்போது பினாங்கு, ஜோர்ஜ்டவுனின் அதன் இரண்டாவது கிளையைத் திறந்துள்ளது.

அதன் பிரமாண்டத் திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக் கிழமை Harbour Trade Centre-ரில் நடைபெற்றது.

2023-ரில் ஒரு வீட்டு வணிகமாகத் தொடங்கிய VM Online Empire, இன்று சொந்தமாக இரண்டாவது கிளைக் கடையைக் கொண்ட வர்த்தமாக வளர்ந்து நிற்பதாக, அதன் நிறுவனர் பத்மபிரியா வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

முதல் கிளையும் இங்கே தான் உள்ளது; மூன்றாவதாக சேமிப்புக் கிடங்கையும் இவர் திறந்துள்ளார்.

குறிப்பாக, ஆயிரணக்கான வடிவமைப்புகளில் தோடுகள், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட chokers கழுத்துப் பட்டைகள் என வாடிக்கையாளர்கள் விரும்பும் தேர்வுகளை VM Online Empire வழங்குகிறது.

Ready stock முறையில் வியாபாரம் செய்ய விரும்புவோரும் தங்களைத் தொடர்புகொள்ளலாம் என்றார் அவர்.

Empire என்ற சொல்லுக்கு ஏற்ப ஏராளமான வர்த்தக வாய்புகளை வழங்குவதே VM Online-னின் சிறப்பம்சமாகும்.

Affiliate வணிகம், முன் பதிவு செய்யாமல் walk-in முறையில் வரும் வாடிக்கையாளர்களுக்கும் திறக்கப்பட்டுள்ளதாக பத்மபிரியா சொன்னார்.

இந்த இரண்டாவது கிளைத் திறப்பு விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய அவர், இதே ஆதரவு நீடிக்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

நியாயமான விலையில் பல்வேறு வகையான வடிவமைப்புகளை வழங்கும் கடையில் ஷாப்பிங் செய்த அனுபவத்தை வாடிக்கையாளர்கள் சிலர் வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்து கொண்டனர்.

VM Online Empire குறித்த மேல் விவரங்களுக்கு அதன் சமூக ஊடகப் பக்கங்களை வலம் வருவதோடு, விரைவில் அறிமுகம் காணவிருக்கும் அதன் கைப்பேசி செயலியையும் மறக்காமல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!