
கோலாலம்பூர், பிப்ரவரி-13 – சந்தையில் உள்ளூர் வெள்ளை அரிசியின் கையிருப்பு போதுமான அளவு இருப்பதை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் 150 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை அங்கீகரித்துள்ளது.
விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு அதனைத் தெரிவித்துள்ளார்.
24 மில்லியன் 10 கிலோ உள்ளூர் வெள்ளை அரிசி மூட்டைகளை உற்பத்தி செய்வதன் மூலம், கையிருப்பை உறுதிப்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் மக்களவையில் தெரிவித்தார்.
இதற்கிடையில், உள்ளூர் தேவையை பூர்த்திச் செய்ய, விலை உச்சவரம்பு ஒரு கிலோவிற்கு 2 ரிங்கிட் 60 சென்னாக நிலை நிறுத்தப்படும்.
அரசாங்கம் அதன் அடுத்த நடவடிக்கையை முடிவு செய்வதற்கு முன், அடுத்த 6 மாதங்களில் முன்னேற்றங்களைக் கண்காணிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.