
பிறை, டிசம்பர்-30 – பினாங்கில் உள்ள பிறை டோல் சாவடியில் நடந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ஆடவர் ஒருவர் காரால் மோதப்பட்டு காயமடைந்தார்.
இரவு சுமார் 11.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
RFID செயலிழந்த டோல் பாதையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பாதிக்கப்பட்ட நபர் தனது மனைவி சிக்கியிருந்த காரை வெளியே எடுக்க, பின்னால் இருந்த வாகனத்தை பின்னோக்கி நகரச் சொல்லியதாக கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சந்தேக நபர் தனது காரை பின்னோக்கி நகர்த்தி திடீரென முன்னால் நின்றிருந்த நபரை மோதிவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார்.
கீழே விழுந்த ஆடவர் கை, விலா எலும்பு மற்றும் காலில் காயங்களுடன் புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருவதுடன், தகவல் தெரிந்தோர் முன்வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.



