
கோம்பாக், டிசம்பர்-11 – சிலாங்கூர் கோம்பாக்கில் 11 வயது சிறுமியை உடல் ரீதியாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சந்தேகத்தில், மாற்றான் தந்தை கைதாகியுள்ளார்.
30 வயது அவ்வாடவரின் கைப்பேசியை பரிசோதித்த போது, அதில் மகளின் புகைப்படங்கள் சந்தேகப்படும்படியான நிலையில் இருந்தது கண்டு தாய் அதிர்ச்சியடைந்தார்.
மகளை அழைத்து விசாரித்த போது, தனக்கு நடந்த கொடுமைகளை அவள் விவரித்த பிறகே உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்தே அவ்வாடவர் அச்செயலைப் புரிந்து வந்துள்ளார்; தாயிடம் எதனையும் சொல்லக் கூடாது என அச்சிறுமியை மிரட்டியும் வைத்துள்ளார்.
இதையடுத்து அம்மாது போலீஸில் புகார் செய்யவே, நேற்று முன்தினம் அந்நபர் கைதானார்.
2017 சிறார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.



