
ஹைதராபாத், நவம்பர்-1, இந்தியா, ஆந்திராவில் தீபாவளிக்காக சாக்கு மூட்டையில் வைத்து மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட ‘வெங்காய வெடி’ பட்டாசு வெடித்ததில், ஒருவர் உயிரிழந்த வேளை, அறுவர் காயமடைந்தனர்.
சாலையிலிருந்த பள்ளத்தில் மோதி மோட்டார் சைக்கிள் நிலைத் தடுமாறி விழுந்த போது, எடுத்துச் செல்லப்பட்ட மொத்தப் பட்டாசுகளும் வெடித்துச் சிதறின.
அதில் உயிரிழந்தவர், பட்டாசுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரில் ஒருவராவார்.
சம்பவ இடத்தருகே நின்று பேசிக் கொண்டிருந்த ஐவரும் அதில் காயமடைந்தனர்.
அறுவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ‘வெங்காய வெடி’ வெடித்துச் சிதறும் வீடியோ வைரலாகியுள்ளது.