
ஜோகூர் பாரு, அக்டோபர்-12, ஜோகூரில் 5 உள்ளூர் ஆடவர்கள் கைதானதை அடுத்து, கார்களைத் திருடி வந்த சிவா கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.
20 முதல் 50 வயதிலான அந்த ஐவரும் ஸ்கூடாய் மற்றும் மாசாய் சுற்று வட்டாரங்களில் கைதாகினர்.
ஸ்கூடாய், தாமான் உங்கு துன் அமீனாவில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி காரொன்று களவுப் போனதை அடுத்து துப்புத் துலங்கி, போலீஸ் அவர்களைக் கைதுச் செய்தது.
சந்தேக நபர்களில் இருவர் கார்களைத் திருடுவதும், மற்ற மூவரும் கார் பாகங்களைத் தனித்தனியாகக் கழற்றி, பழைய சாமான்களாக விற்று வருவதும் கண்டறியப்பட்டது.
கைதான ஐவரில் நால்வருக்கு, போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் குற்றப்பதிவுகள் இருப்பதும் தெரிய வந்தது.
விசாரணைக்காக அவர்கள் 2 முதல் 7 நாட்கள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.