140 ஐயப்பன் சுவாமி பக்தர்களை புனித யாத்திரைக்கு சபரிமலைக்கு அனுப்பி வைத்த Batik Air

செப்பாங், ஜனவரி-4,
புனித யாத்திரை மேற்கொண்டு சபரிமலை புறப்பட்ட 140 ஐயப்பன் சுவாமி பக்தர்களுக்கு, KLIA டெர்மினல் 1 விமான முனையத்தில், Batik Air விமான நிறுவனம் பிரத்யேக வழியனுப்பு விழாவை நடத்தியது.
திருச்சிராப்பள்ளி புறப்பட்டுச் செல்லும் இந்த பக்தர்களை அனுப்பி வைக்கும் அந்நிகழ்ச்சியில், சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர்
குணராஜ் ஜோர்ஜ் கலந்து கொண்டார்.
ஆண்டுதோறும் 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கும் இந்த யாத்திரைக்கு, KLIA-வில் கடந்தாண்டு முதல் சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குணராஜ் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
இந்நிலையில், பயணிகள் சீராகவும் மரியாதையுடனும் புறப்படுவதற்காக விமான நிறுவனமும் தனிப்பட்ட ஏற்பாடுகளை செய்துள்ளதாக, Batik Air நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ சந்திரன் ராமமூத்தி கூறினார்.
வழியனுப்பு விழாவின் ஒரு பகுதியாக, பக்தர்களுக்கு தேவையான மத சடங்குகளுக்காக Batik Air சார்பில் நெய் வழங்கப்பட்டது.
அது குறித்து கருத்துரைத்தார் Enrico’s நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் V. ராஜேந்திரன்…
இவ்வேளையில், தங்களின் கோரிக்கையை ஏற்று தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக KLIA-வில் ஐயப்பா பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய உதவிய அனைவருக்கும், பத்து மலை அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி தேவஸ்தானத்தின் தலைவரும்,
மலேசிய ஐயப்பா சேவை சங்கத்தின் தலைவருமான யுவராஜா குருசாமி நன்றித் தெரிவித்தார்.
இவ்வாண்டுக்கான சபரிமலை யாத்திரை குறித்து மேலும் சிலர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு, அவர்களின் புனிதம் பாதிக்கா வண்ணம் இத்தகைய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது உண்மையிலேயே பாராட்டுக்குரிய முயற்சியாகும்.



