Latestமலேசியா

2 ரொட்டி சானாயின் விலை RM 18?; இனி பணக்காரர்களுக்கான உணவு என்று மக்கள் கிண்டல்

கோலாலம்பூர், டிச 27 – எங்கும் எந்நேரத்திலும் ரொட்டி சானாய் என்பது மலேசியர்களின் விருப்ப உணவாக இருக்கும் நிலையில், நபர் ஒருவர் தான் ஒரு சாதாரண ரொட்டி சானாயின் விலை 9 ரிங்கிட், ஆக 2 ரொட்டிகளுக்கும் மொத்தம் 18 ரிங்கிட் கட்டணம் கட்டியதாக வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்று வலைத்தளவாசிகளை வாயடைக்கச் செய்துள்ளது.

ருசிக்கு மட்டுமல்ல, மலிவான, அனைத்து வர்கத்தினராலும் வாங்ககூடிய ஒரு உணவுதான் ரொட்டி சானாய். அப்படி இருக்கு அதன் விலை 9 ரிங்கிட்டா என வலைத்தளவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

‘Hairil Aien’ எனும் ஆடவர் ஒருவர், தனது முகநூலில் ஒரு உணவகத்தின் ரசீது ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ஒரு நாசி லெமாக்கின் விலை 10 ரிங்கிட், 1 முட்டை ரொட்டி சானாயின் விலை 11 ரிங்கிட், 2 சாதா ரொட்டி சானாய்களின் விலை 18 ரிங்கிட், கூடுதலான 2 மங்கு கறிக்கு 6 ரிங்கிட் என கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவில் அவர் சாப்பிட்ட உணவுகளின் படங்களையும் அவர் பதிவேற்றம் செய்திருந்தார்.

இந்தப் பதிவினால் கொதிந்தெழுந்த வலைத்தளவாசிகள் இனி ரொட்டி சானாய் பணக்காரர்களின் உணவாகிவிடும், அப்படி என்ன மாவையும் வெண்ணையும் பயன்படுத்துகிறார்கள் இவ்வளவு விலை போட என கருத்து பதிவிட்டு சம்பந்தப்பட்ட உணவகத்தை சாடி வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட உணவகம் எங்குள்ளது என்ற விவரத்தை ‘Hairil Aien’ தன் பதிவில் குறிப்பிடாத நிலையில், அந்து கெந்திங் மலையில் உள்ள உணவகம் என நம்பப்படுகிறது.

இதனிடையே இன்னும் சில வலைத்தளவாசிகள் அந்த உணவகத்திற்கு சாதகமாக பேசியுள்ளனர். மாமாக் உணவகத்தில் ஒரு ரொட்டி சானையை உண்பதற்கும், குளீரூட்டி, அழகான மேசை நாட்காலி, சில்லென்ற ஒரு சூழல் என சற்று நல்ல சூழலில் அதே ரொட்டி சானையை உண்பதற்கும் வித்தியாசம் இருக்கும் அல்லவா. அவர்களின் இடத்தின் சேவைக்கும் சேர்த்துதான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வணிகத்தில், பொருள் மற்றும் சேவைக்கும் சேர்த்துதான் விலை நிர்ணயிக்கப்படுகின்றது என்பது மிகவும் சாதாரண ஒரு புரிதல் என்ற கருத்தும் பகிரப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!