Latestமலேசியா

MH 370 சில நாட்களில் கிடைத்துவிடும் புதிதாக தேடும் நடவடிக்கையை தொடங்குவீர்; மலேசிய ஆஸ்திரேலியாவுக்கு – நிபுணர்கள் அழைப்பு

கோலாலம்பூர், டிச 26 – காணாமல்போன மலேசிய ஏர்லைன்ஸின் MH370 விமானம் குறித்து புதிய தகவல்கள் அடிப்படையில், அவ்விமானத்தை தேடும் நடவடிக்கையில் புதிதாக ஈடுபடும்படி மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு வான்வெளி நிபுணர்களான ஜீன்-லூக் மார்கண்ட் மற்றும் விமானி பேட்ரிக் பில்லி கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய தேடும் நடவடிக்கையை தொடங்கும்படி ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் , மலேசியா மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள், “Ocean” கப்பல் தேடும் நிறுவனம் ஆகியவற்றுக்கு பேட்ரிக் பில்லி, விமானி பேட்ரிக் பில்லி கேட்டுக்கொண்டதாக ஆஸ்திரேலியாவின் செய்தி தளமான NEWS.COM.AU தெரிவித்துள்ளது.

​​இந்த ஜோடி புதிய தேடல் பகுதியை, வெறும் 10 நாட்களில் உதவிக்கான பகிரங்க அழைப்பின் மூலம் மேற்கொள்ளமுடியும் என்று கூறியதாக கூறப்படுகிறது. எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது. புதிய திறன்களைக் கருத்தில் கொண்டு 10 நாட்கள் கால அவகாசத்தில் காணாமல்போன விமானத்தை கண்டுப் பிடிக்க முடியும் என அவர்கள் கூறினர். புதிதாக தேடும் நடவடிக்கைக்கு நாங்கள் தேர்வு செய்துள்ள புதிய பகுதி நம்பத்தகுந்த பாதை என்று அவர்கள் தெரிவித்தனர். MH370-இன் உடைந்த பகுதி கண்டுபிடிக்கப்படும் வரை, என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியும் வாய்ப்பு இல்லை. ஆனால், இது ஒரு நம்பத்தகுந்த பாதை என்று மார்கண்ட் தெரிவித்தார். விமானம் வேண்டுமென்றே கடத்தப்பட்டு ஆழ்கடலில் இறக்கப்பட்டது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் புதிய தேடுதல் பகுதி உருவாக்கப்பட்டதாக மார்கண்ட் மற்றும் பில்லி தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!