Latestமலேசியா

இந்திய சமூகத்திற்கு 2,500 மெட்ரிகுலேசன் இடங்களை வழங்குவீர் பிரதமர் அன்வாருக்கு செனட்டர் சிவராஜ் வலியுறுத்து

கோலாலம்பூர், மார்ச் 19 – சமூகத்திற்கு 2,500 மெட்ரிகுலேஷன் இடங்களை வழங்குவதன் மூலம் இந்தியர்களின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான தனது அர்ப்பணிப்பைக் காட்டுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு செனட்டர் Sivaraj Chandran கோரிக்கை விடுத்துள்ளார்.

மலாய்க்காரர்களிடமிருந்து ஆதரவை இழக்க நேரிடும் என்று அன்வார் பயப்பட வேண்டியதில்லை. இந்திய சமூகத்தினர் மிகவும் பின்தங்கியுள்ளனர் என்பதால் அவர்களுக்கு இத்தகைய உதவி தேவைப்படுவதாக சிவராஜ் வலியுறுத்தினார்.

பிரதமர் என்ற முறையில் அன்வார் அனைத்து இன மக்களுக்கும் நியாயமான மற்றும் சமமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதை அவருக்கு தாம் நினைவூட்ட விரும்புவதாகவும் சிவராஜ் தெரிவித்தார்.

இந்திய சமூகத்திற்கு பிரதமர் உதவினால் சீன மற்றும் மலாய் சமூகத்தினர் கூட மகிழ்ச்சி அடைவார்கள் . நீங்கள் இந்தியர்களுக்கு உதவுவதால் சீன மற்றும் மலாய் சமூகங்கள் உங்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தமாட்டார்கள் என்று தாம் உறுதியாக நம்புவதாக சிவராஜ் கூறினார்.

இந்திய சமூகத்திற்கு 2,500 இடங்களை வழங்குவது அவர்கள் சிக்கியுள்ள வறுமையின் மோசமான சுழலில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கு நீண்ட தூரம் செல்லும், என்று மேலவையில் அரச உரை மீதான விவாதத்தின் போது செல்வராஜ் சுட்டிக்காட்டினார்.

இந்த பிரச்சனை குறித்து பிரதமரிடம் இதற்கு முன்பு எழுப்பியதாகவும் ஆனால் இதுவரை பதில் வரவில்லை என்றும் அவர் கூறினார். பரிந்துரைக்கப்பட்ட 2,500 இடங்கள் குறித்து வினவப்பட்டபோது , ​​2017 ஆம் ஆண்டில் மொத்தம் 1,600 இடங்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் Najib Razak பிரதமராக இருந்தபோது 2,200 இடங்கள் தருவதாக வாக்குறுதி அளித்தார்.

இருப்பினும், அதன்பின்னர் இந்த எண்ணிக்கை 2,000க்கும் குறைவாகவே இருந்து வருகிறது. கடந்த ஆண்டு இது மிகவும் குறைவாக இருந்தது. மதிப்பிடப்பட்ட 30,000 இடங்களில் 10 விழுக்காடு மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்படுகிறது. சுமார் 5.4 விழுக்காடு இடங்கள் சீனர்களுக்கும் எஞ்சியவை இந்திய சமூகத்திற்கும் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில், 2018 முதல் இந்திய மாணவர்களுக்கு சராசரி சுமார் 1,100 இடங்கள் வழங்கப்பட்டதாக சிவராஜ் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!