
ஜோர்ஜ் டவுன், செப்- 29 ,
இன்று அதிகாலை, ஜோர்ஜ் டவுன் , Lintang Macallum 2 இல் , சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மரம் விழுந்ததில் நசுங்கி சேதம் அடைந்தன. இச்சம்பவம் தொடர்பில் அதிகாலை மணி 2.35க்கு தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக பினாங்கு தீயணைப்பு மற்றம் மீட்புப் நடவடிக்கை பிரிவின் உதவி இயக்குநர்
ஜோன் சகுன் பிரான்சிஸ் ( John Sagun Francis) தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து Lebuh Pantai லெபு பந்தாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பினாங்கு மாநகர் மன்றத்திற்கு சொந்தமான விழுந்த மரத்தின் கீழ்
மூன்று கார்களும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இருந்ததைத் தொடர்ந்து சிறப்பு சாதனங்களை பயன்படுத்தி அந்த மரத்தை தீயணைப்பு படை வீரர்கள் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் அல்லது எவரும் காயம் அடையவில்லை என ஜோன் சகுன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.