Latestமலேசியா

சிவலிங்கத்தை சம்ரி வினோத் சிறுமைப்படுத்துவதா? மலேசிய இந்து சங்கம் கண்டனம்

கோலாலம்பூர், மார்ச் 21 – இந்து சமயத்தில் முதன்மை ஆன்மிக நெறியான சைவ சமயத்தின் வழிபாட்டு நாயகன் சிவபெருமாணின் அருவுருவத் திருவுருவான சிவலிங்கத்தை சிறுமைப்படுத்தியுள்ள இஸ்லாமிய சமய போதகர் சம்ரி வினோத்திற்கு மலேசிய இந்து சங்கம் கடுமையாக கண்டனத்தை தெரிவித்திக்கிறது. இந்துவாக பிறந்து இந்துவாக வாழ்ந்து இடையில் இஸ்லாத்தை தழுவிய சம்ரி வினோத், இந்து சமயத்தை தொடர்ந்து சிறுமைப்படுத்தி வரும்போக்கை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் கேட்டுக் கொண்டார். தற்போது சிவலிங்கத்தை அவமதிக்கும் வகையில் சம்ரி வினோத் பேசியிருக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.

சைவ சமயத்தில் உருவ வழிபாடு உள்ளதைப் போன்று, அருவ வழிபாடும் உள்ளது. சோதி வழிபாடு என்பது அருவுருவ வணக்க முறைத்தான். அதைப்போல சிவபெருமானின் அருவுருவ வடிவம்தான் சிவலிங்கம்.

சிவலிங்கத்தின் அடித்தளம் உயிர்கள் வாழும் பூமியையும் மேற்பகுதி வானுலகையும் குறிக்கிறது. மொத்தத்தில் மண்ணையும் விண்ணையும் ஆளும் பரம்பொருளான சிவபெருமானின் அருவுருவக் கோலம்தான் சிவலிங்கம்
என்னும் திருவுருவம். ஒரு சொல்லுக்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததுதான். இதை அறியாமல் சிவலிங்கத்தை சிறுமைப்படுத்தும் வகையில் ஸம்ரி வினோத் விளக்கம் அளித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. சம்ரி வினோத் தொடர்ந்து இந்து சமயத்தை சிறுமைப்படுத்தி வருவதை அரசாங்கமும் கண்டுகொள்ளாமல் இருப்பதோடு போலீஸ் துறையும் இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருந்து வருவதை தங்க கணேசன் சாடினார். மலேசியாவின் மாண்புக்கு பெருமை சேர்க்கும் சமய நல்லிணக்கத்தை சீர்கெடுக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் சம்ரி வினோத் மீது போலீஸ் துறை உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்க கணேசன் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!