Latestமலேசியா

ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம் 2.0 ஏற்பாடு: எல் டி சங்கம்

தெலுக் இந்தான், மே 15- கடந்த மே 12-ஆம் தேதி, பாகான் டத்துக் சுயநலமற்ற ஆரோக்கிய விழிப்புணர்வு கழகத்தின் (Persatuan Kesedaran Gaya Hidup Sihat BaganDatuk (LT Society)) ஏற்பாட்டில், Healthy Festivity 2.0, முகாமின் 2-வது நாள் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

சித்திரை பௌர்ணமியன்று நடைபெற்ற இந்நிகழ்வில்,பல்வேறு சமூக பின்னணிகளைக் கொண்ட மொத்தம் 1,367 பங்கேற்பாளர்கள் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த நிகழ்வில் முழுமையான சுகாதார பரிசோதனை மற்றும் இலவச கண் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இம்முகாமில் 800 வாசிப்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டதோடு புற்றுநோயாளிகளுக்கான முடிதானமும் நடைபெற்றது.

இந்நிலையில், மக்களின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி வருங்காலத்தில் மேலும் பல ஆரோக்கிய திட்டங்களை LT Society முன்னெடுக்கவுள்ளதாக அதன் தலைவர் டாக்டர் கே. நரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இச்சமயத்தில், இம்முகாமை வெற்றிகரமாக நடத்த துணைநின்ற அனைத்து தரப்பினர்களுக்கும் தனது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!