
வாஷிங்டன், செப்டம்பர் 25 –
கடந்த செவ்வாய்க்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐக்கிய நாட்டு சபையில் உரையாற்றும் போது எஸ்கலேட்டர், டெலிப்ராம்ப்டர், ஒலி அமைப்பு செயலிழந்ததை “மூன்று மடங்கு சதித்திட்டம்” எனக் குற்றம்சாட்டி விசாரணை கோரினார்.
நியூயார்க் தலைமையகத்தில் நடந்த இச்சம்பவம் தவறுதலாக நிகழ்ந்ததென ஐக்கிய நாட்டு சபை விளக்கம் அளித்த போதும் ட்ரம்ப் அதனை ஏற்க மறுத்தார்.
ஐ.நா. பேச்சாளர், அமெரிக்க ஒளிப்பதிவாளர் ஒருவர் தவறுதலாக எஸ்கலேட்டர் பாதுகாப்பு முறையை இயக்கியிருக்கலாம் என தெரிவித்ததைத் தொடர்ந்து டெலிப்ராம்ப்டர் பிரச்சனை வெள்ளை மாளிகையின் பொறுப்பு என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் புதிய அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ், எஸ்கலேட்டர் சம்பவத்துக்கான முழு அறிக்கையும், டெலிப்ராம்ப்டர் கோளாறுக்கான காரணமும், தடுப்பு நடவடிக்கைகளும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.