
கோலாலம்பூர், செப்டம்பர்- 30,
கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி கோலாலம்பூர் பெர்ஜாயா டைம்ஸ் ஸ்கொயர் ஹோட்டலில் நடைபெற்ற ஆசியான்–இந்திய வணிக மாநாட்டில் (ASEAN–India Business Summit 2025) சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதில், “ASEAN–India Outstanding Entrepreneur Lifetime Achievement Award” எனப்படுகின்ற வாழ்நாள் சாதனையாளர் என்ற உயரிய விருது ‘Tasly’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ டாக்டர் ரவி பக்கிரிசாமிக்கு வழங்கப்பட்டது
இந்த மாநாடு ASEAN Economic Club (AEC), ASEAN-India Economic Council (AIEC), KSI Strategic Institute for Asia Pacific ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில், மலேசியாவிலுள்ள இந்திய உயர் ஆணையத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.
இதில் இந்தியாவின் வாணிப மற்றும் தொழில் அமைச்சர் பியூஷ் கோயல், மலேசியாவின் டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தேவ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவன தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மாநாட்டின் போது ஆசியான், இந்தியா இடையிலான வணிக மற்றும் முதலீட்டு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், டிஜிட்டல், பசுமை தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் ஆகியவை விவாதிக்கப்பட்டது.
மாநாட்டில் நடைபெற்ற சிறப்பு விருதளிப்பு விழாவில் கலந்து கொண்ட நிறுவனங்களுக்கு ASEAN–India Business Excellence Awards, தொழில் முனைவோருக்கு ASEAN–India Outstanding Entrepreneur Awards மற்றும் தொழில்நுட்ப துறையில் சிறந்த நிறுவனங்களுக்கு ASEAN–India Innovation and Technology Excellence Awards வழங்கப்பட்டது.
இந்நிலையில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற டத்தோ டாக்டர் ரவி பக்கிரிசாமியின் சாதனைகள், வெற்றிகள் மற்றும் சமூகத்திற்கான பங்களிப்புகள் சிறப்பானவை என்று ASEAN Economic Club தலைவர் மற்றும் KSI Strategic Institute for Asia Pacific தலைவர் டான் ஸ்ரீ மைக்கேல் யோ தெரிவித்துள்ளார்.
மேலும் சரியான நேரத்தில் சரியான இடத்தில் டத்தோ ரவி கௌரவிக்கப்பட்டது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்நிகழ்வில் விருது வென்றவர்களில் 27Group நிறுவனத்தின் தோற்றுனர் மற்றும் நிர்வாக இயக்குனர் கிரிஸ் ராமசந்திரன், GTM Group நிறுவனத்தின் தோற்றுனர் மற்றும் தலைவர் ஆகாஷ் கோதாரி, Adastra Intelectual Property நிறுவனத்தின் தோற்றுனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டத்தோ மோகன் உட்பட பலருக்கும் விருது வழங்கப்பட்டது.



