
மும்பை, ஜனவரி-20-ஹிந்தி திரையுலகமான போலிவூட்டில் “மத அடிப்படையிலான பாகுபாடு” இருப்பதாக பேசி சர்ச்சையில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுக்கு, தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
BBC Asian Network க்கு அளித்த பேட்டியில், கடந்த சில ஆண்டுகளில் தாம் சில படங்களில் இருந்து விலக்கப்பட்டதாகவும், அதற்கு “மத பாரபட்சம்” காரணமாக இருக்கலாம் என்றும் ரஹ்மான் குறிப்பிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த வலச்சாரி இந்து அமைப்புகள் பொங்கி எழுந்தன.
தீவிர இந்து ஆதரவாளரான நடிகையும் பி.ஜே.பி நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத்தும் ரஹ்மானை கடுமையாக விமர்ச்சித்தார்.
சமூக ஊடகங்களிலும், வலைத்தளவாசிகள் ரஹ்மானை ‘வறுத்தெடுத்து’ வருகின்றனர்.
சிலர், ரஹ்மான் நாட்டையே அவமதிப்பதாக குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், ரஹ்மான் தனது Instagram பக்கத்தில் ஒரு வீடியோ வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்..
“என் நோக்கம் எப்போதுமே இந்தியக் கலாச்சாரத்தை உயர்த்துவது தான், யாரையும் புண்படுத்துவது அல்ல. என் வாழ்க்கையே இந்த நாட்டிற்கான இசைச் சேவையாகும்” என அதில் அதில் கூறினார்.
இந்த விவகாரம் போலிவூட்டில் உள்ள அதிகார மையம், படைப்பாற்றல் சுதந்திரம் மற்றும் பாகுபாடு குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
59 வயது ரஹ்மான் தற்போது ஹன்ஸ் சிம்மருடன் இணைந்து உருவாக்கும் இராமாயணம் திரைப்படத்தின் பின்னணி இசை உள்ளிட்ட பல திட்டங்களில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.



