Latestமலேசியா

40 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வரவிருக்கும் MTV சேனலின் சேவை

லாஸ் ஏஞ்சல்ஸ், அக்டோபர் 14 –

நவீன இசைத்தொலைக்காட்சி வரலாற்றில் முக்கிய பங்காற்றிய MTV, 40 ஆண்டுகளுக்குப் பிறகு தனது இசை சேனல்களை 2025 இறுதிக்குள் நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த முடிவுடன், MTV Music, MTV 80s, MTV 90s, Club MTV மற்றும் MTV Live உள்ளிட்ட ஐரோப்பிய துணை சேனல்கள் அனைத்தும் வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நிறுத்தப்படவுள்ளன.

Paramount நிறுவனத்தின் உலகளாவிய செலவுக் குறைப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இசை ரசிகர்கள் YouTube, Spotify, Vevo மற்றும் TikTok போன்ற டிஜிட்டல் தளங்களில் இசையை அணுகுவதால் பாரம்பரிய தொலைக்காட்சி சேனல்களுக்கு பெருமளவு ரசிகர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், MTV-யின் முதன்மை சேனல் தொடர்ந்து ஒளிபரப்பப்படும் என்றும் கடந்த சில ஆண்டுகளில் அது இசை வீடியோக்களுக்கு பதிலாக The Challenge, Geordie Shore போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

1981-ல் “Video Killed the Radio Star” பாடலுடன் தொடங்கிய MTV, பல தசாப்தங்களாக உலக இசை கலாச்சாரத்தின் அடையாளமாக திகழ்ந்தது. அதன் நிறைவு, ஒரு காலத்தின் முடிவாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!