
ஜெம்போல், பிப்ரவரி-9,
நெகிரி செம்பிலான், பஹாவ், தாமான் ஏசிபிஇ சாலையில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட விபத்தால், 2 கும்பல்கள் மோதிக் கொண்டன.
இதையடுத்து 10 பேரை போலீஸ் கைதுச் செய்தது.
21 வயது முதல் 43 வயதிலான அவர்கள், சம்பவ இடத்திலும் பஹாவ் சுற்று வட்டாரத்திலும் கைதானதாக, ஜெம்போல் போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் Hoo Chang Hook தெரிவித்தார்.
10 பேரும் விசாரணைக்காக 4 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக விபத்தினால் ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியதில், மூவர் தலையில் ஹெல்மட்டால் தாக்கப்பட்டனர்.
அவர்கள் ஜெம்போல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தில் ஆடவர்கள் அடித்துக் கொள்ளும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.