Latestஉலகம்

IndiGo விமானத்தினுள் உணவுகள் வைக்கும் பகுதியில் கரப்பான்பூச்சிகள்

புதுடெல்லி, பிப்ரவரி 26 – விமானத்தின் உணவுகள் வைக்குமிடத்தில் கரப்பான் பூச்சிகள் இருக்கும் வீடியோ வைரலாகி IndiGo விமான நிறுவனம் மீண்டுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இதனால் சுத்தத்தைப் பேணுவதில் அந்நிறுவனத்தின் தர செயல்பாட்டு நடைமுறைகள் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

சம்பவம் வைரலாகியதால் உடனடியாக செயலில் இறங்கிய விமான நிறுவனம், பயணிகளின் பாதுகாப்புக் கருதி, உணவுகள் இருக்கும் பகுதிகளை முழுமையாகச் சுத்தம் செய்துள்ளது.

அச்சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்த IndiGo, சுத்தமான – பாதுகாப்பான விமானப் பயணங்களை உறுதிச் செய்வதே தங்களின் முதன்மைக் கொள்கை என்றும், தனது தரப்பு அதில் இன்னும் அதிக கவனத்தோடு செயல்படும் என்றும் உத்தரவாதம் அளித்தது.

ஆயினும் விமான நிறுவனத்தின் பதிலில் டிவிட்டர் பயனர்கள் பெரும்பாலோர் திருப்தி அடையவில்லை என்பது, அவர்களின் கருத்துகளிலேயே தெரிகிறது.

“இது ஆணவமிக்க, அடிப்படையற்ற, பொறுப்பற்ற பதில். எனவே இந்திய விமான போக்குவரத்து ஆணையம் IndiGo மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என காட்டமாகக் கூறினார்.

IndiGo இது போன்ற சர்ச்சைசளில் சிக்குவது இது ஒன்றும் முதல் முறையல்ல.

விமானத்தினுள் தான் வாங்கிய சேன்விச்சில் புழுக்கள் நொண்டிக் கொண்டிருந்தாக பெண் பயணி ஒருவர் புகார் கூறியதை அடுத்து, கடந்த மாதம் தான் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு IndiGo நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!