
மூவார், ஜூலை 29 – கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது முதலாளிக்குச் சொந்தமான மெத்தையைத் திருட முயன்ற நபரைத் தாக்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவருக்கு நீதிமன்றம் 2,000 ரிங்கிட் அபராதத்தை விதித்துள்ளது.
நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 38 வயதான எச். கார்த்திகேசு அக்குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜாலான் பக்ரியிலுள்ள வீடொன்றில் ஆடவர் ஒருவருக்கு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய குற்றத்தில் சந்தேக நபர் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் வீட்டிற்கு வெளியே வைத்திருந்த மெத்தையைத் திருட முயன்ற போது சந்தேக நபர் அவரைத் தாக்கி உடல் ரீதியான காயங்கள் ஏற்படுத்தியது பின்பு விசாரணையில் தெரிய வந்துள்ளது.



