
கோலாலம்பூர், செப் 19 – மலேசியாவில் அண்மையில் கோவிட் -19 தொற்றினால் நோய்வாய்ப்பட்டிருந்த 91 வயது முதியவர் ஒருவர் புதிதாக மரணம் அடைந்துள்ள வேளையில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது தொற்றுகள் கிட்டத்தட்ட 50 விழுக்காடு குறைந்துள்ளன.
கோவிட் -19 தொற்று அபாயங்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்ட சுகாதார நடைமுறைகளின் ஒரு பகுதியாக, உள்ளூர் மக்கள் பொது இடங்களிலும், பஸ்கள் மற்றும் ரயில்கள் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களிலும் முகக் கவரிகளை தொடர்ந்து அணிந்து வருகின்றனர் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சுல்கெப்லி அகமட் ( Dzulkefly Ahmad ) முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு தொற்றுநோயின் 35 ஆவது வாரம்வரை 43,087 கோவிட் தொற்று பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 85,297 தொற்று சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
ஆகக்கடைசி நிலவரப்படி இவ்வாண்டின் 35 ஆவது வாரத்தில் 594 கோவிட்-19 தொற்று பதிவாகின. இதற்கு முந்தைய வாரத்தில் இருந்த 681 தொற்றுகளை ஒப்பிடுகையில் இது 12.8 விழுக்காடு குறைந்துள்ளது.