
ஷா ஆலாம், அக்டோபர்-23 – ஷா ஆலாம், செக்ஷன் 14-ல் உள்ள பேரங்காடி வளாகத்திற்குள் வளர்ப்பு நாயை அழைத்துச் செல்ல முயன்ற ஆடவரால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
முதலில் நாயை அக்கட்டடத்துக்கு வெளியே கட்டிப் போட்டு விட்டு, உள்ளே நகைக் கடைக்குப் போன 52 வயது அந்நபரை, நகைக்கடைப் பணியாளர்கள் கண்டுகொள்ளவில்லையாம்.
இதனால் சினமடைந்தவர் கடுஞ்சொற்களால் அவர்களுடன் வாக்குவாதம் செய்தார்.
அங்கிருந்த பொது மக்களும் பாதுகாவலர்களும் அவரை சமாதானம் செய்தனர்.
அப்போது சிறிய கைகலப்பும் ஏற்பட்டது.
ஒருவழியாக அவரைத் தேற்றி வெளியே கொண்டு வந்த போது, மீண்டும் ஆவேசமான அந்நபர் நாயை பேரங்காடிக்குள் கூட்டிச் செல்ல முயன்றார்.
எனினும் பணியிலிருந்த பாதுகாவலர்கள் அவரைத் தடுத்தி நிறுத்தினர்.
இதையடுத்து சந்தேக நபர் மற்றும் நேரில் பார்த்த காட்சி ஆகியோரிடமிருந்து 3 புகார்கள் பெறப்பட்டிருப்பதை, ஷா ஆலாம் போலீஸ் உறுதிபடுத்தியது.