
கோலாலம்பூர், ஜனவரி-14, கோலாலம்பூர் TRX வணிக வளாகத்தில் கட்டுமானத்தில் உள்ள ஹோட்டலில் நேற்றிரவு தீ ஏற்பட்டதால் அவ்விடமே பரபரப்பானது.
அதன் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின.
தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு-மீட்புத் துறை தீயை அணைத்தது.
சம்பவத்தின் போது உள்ளேயிருந்த சுமார் 50 கட்டுமானத் தொழிலாளர்கள் தீ வேகமாகப் பரவுவதற்குள் வெளியே ஓடி தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.
அதில் யாரும் காயமடைந்ததாக தகவல் இல்லை.
சேத விவரங்களும் தெரியவரவில்லை.