Latestமலேசியா

1.5 மில்லியன் நிறுவனங்களில் 435,000 நிறுவனங்கள் மட்டுமே வரி செலுத்த பதிவு

சைபர்ஜெயா, மார்ச் 1 – நாட்டில், வரி செலுத்த ஏதுவாக, LHDN – உள்நாட்டு வருமான வரி வாரியத்திடம் பதிந்து கொண்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது.

நாட்டில் செயல்பட்டு வரும் 15 லட்சம் நிறுவனங்களில், இதுவரை நான்கு லட்சத்து 35 ஆயிரம் அல்லது 29 விழுக்காட்டு நிறுவனங்கள் மட்டுமே வரி வருவாயை செலுத்துவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நாட்டின் தேசிய வரி அடிப்படையும், 11.2 விழுக்காடாக, மிகவும் குறைவான விகிதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அது, அண்டை நாடுகளான சிங்கப்பூரின் 12.6 விழுக்காடு மற்றும் தாய்லாந்தின் 16.4 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானது என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

வருமான வரி வாரியத்தின் பணியாளர்கள் மற்றும் பங்காளிகளின் நிர்வாகம், விடாமுயற்சி, செயல்திறன், உட்பட அவர்களின் சேவை அல்லது நிலைப்பாடு எவ்வளவு அவசரமானது மற்றும் அவசியமானது என்பதை நினைவூட்டுவதற்காகவும், செலுத்தபட்ட வருவான வரி தொகையோ மிகவும் குறைவானது என்பதை சுட்டிக்காட்டவும் தாம் அந்த ஒப்பீட்டை செய்ததாக பிரதமர் சொன்னார்.

நாட்டின் வளர்ச்சியை உறுதிச் செய்ய மட்டுமின்றி, மக்களின் நலன் பேணவும் அந்த வருவாய் மிகவும் அவசியமானது.

சைபர்ஜெயாவில், உள்நாட்டு வருமான வரி வாரியத்தின், 28-வது வருவாய் தினக் கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பிரதமர் உரையாற்றினார்.

கடந்தாண்டு மிக அதிகமாக 18 ஆயிரத்து 334 கோடி ரிங்கிட் வருமான வரியை வசூலித்து உள்நாட்டு வருமான வரி வாரியம் புதிய வரலாற்றை பதிவுச் செய்திருந்தது.

அந்த தொகை, அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.49 விழுக்காடு அல்லது 780 கோடி ரிங்கிட் அதிகமாகும்.

அதனால், இவ்வாண்டு உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் சிறப்பான செயல்திறனின் அடிப்படையில், வரி வசூலை மேலும் அதிகரிக்க முடியும் என நிதி அகைச்சருமான அன்வார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!