Latestமலேசியா

பேராவில் இன்னமும் 18 ஒரே மலேசிய கிளினிக்குகள் செயல்பட்டு வருகின்றன – சிவநேசன் தகவல்

ஈப்போ, டிச 7 – பேராவில் இன்னமும் 18 ஒரே மலேசிய கிளினிக்குகள் செயல்பட்டு வருவதாகவும் (KKOM) அல்லது கிளினிக் கோமுனிட்டி ‘Klinik Komuniti’ என்ற பெயர் மாற்றத்தோடு அவை செயல்பட்டு வருவதாக பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

காய்ச்சல் ,இருமல் , மூக்கடைப்பு ,சளி மற்றும் சிறு சிறு நோய்களால் பாதிக்கப்படும் உள்ளூர் மக்கள் சிகிச்சையை பெறுவதற்கு அந்த கிளினிக்குகள் பெரும் பயனாக இருப்பதாக அவர் கூறினார்.

புண்களை கழுவி அதற்கு மருந்து வைப்பதற்கும், காயங்களுக்கான தையலை பிரிப்பதற்கும் , நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கான சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவைகளையும் அந்த கிளினிக்குகள் வழங்கி வருவதாக பேரா சட்டமன்ற கூட்டத்தில் கேள்விக்கு பதில் அளித்தபோது சிவநேசன் தெரிவித்தார்.

அதோடு ஈப்போவில் கம்போங் தவாஸ், மஞ்சுங்கில் தாமான் சமுதேரா, தஞ்சோங் மாலிம் . பெஹ்ராங் ஆகிய இடங்களில் உள்ள இதர மூன்று KKOM கிளினிக்குகள் தாய் மற்றும் சேய் சுகாதார பராமரிப்பு சேவையை வழங்கி வருவதாகவும் சிவநேசன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!