
மெடிசன், ஜன 7
பிரபல F1 கார் பந்தய வீரர் Michael Schumacher இறந்துவிட்டாரா? நேற்று முதல் இணையத்தில் இது தொடர்பான தகவல்கள் குவிந்து வரும் நிலையில், உண்மையிலேயே இறந்தது Michael Schumacher என்ற பெயரைக் கொண்ட Wisconsinசினை சேர்ந்த புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் என்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.
பந்தய வீரர் Michael Schumacher மரணம் அடைந்ததாக வெளியான வதந்தி உண்மையில்லை எனவே எங்கள் மனதை புண்படுத்தும் வகையில் வதந்திகளைன் பறப்பாதீர்கள் என அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனிடையே 75வது புகழ்ப்பெற்ற வரலாற்றாசிரியர் Michael Schumacher டிசம்பர் 29ஆம்தேதியன்று இறந்த நிலையில் NBA கூடைப்பந்து விளையாட்டாளர் George Mikanனின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் “Mr Basketball ” என்ற புத்தகம் உட்பட பலரது வாழ்க்கை வரலாற்றை சித்தரித்து Schumacher புத்தகம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழு முறை Formula 1 உலக சாம்பியனான Michael Schumacherருடன் அந்த எழுத்தாளரின் பெயர் ஒற்றுமையாக இருந்ததைத் தொடர்ந்து இந்த குழம்பம் ஏற்பட்டது.



