Latestஉலகம்

பகடிவதை ஏற்படுத்திய மனக்காயம்; 50 ஆண்டுகள் கழித்து முன்னாள் வகுப்பு தோழரை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

சவுத் டக்கோட்டா, அக்டோபர்-5,

அமெரிக்காவின் South Dakota மாநிலத்தைச் சேர்ந்த 73 வயது கார்ல் எரிக்சன் (Carl Ericsson) என்பவர், பள்ளி நாட்களில் தன்னை பகடிவதை செய்த முன்னாள் நண்பர் நோர்மன் ஜோன்சனை (Norman Johnson) 50 ஆண்டுகள் கழித்து சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

மனநலக் கோளாறுடன் குற்றத்தை ஒப்புக்கொண்ட எரிக்சன், ஜோன்சனை முகத்தில் இருமுறை சுட்டதாக தெரிவித்தார்.

பள்ளி காலத்தில் உள்ளாடை பட்டையை (underwear strap) விளையாட்டாக தலையில் போட்ட நண்பரின் செயல், தனக்கு ஏற்பட்ட அவமானகரமான சம்பவம் எனக் கருதிய எரிக்சனின் மனதில், 50 ஆண்டுகளாக அது தீரா பகையாக எரிந்துகொண்டிருந்தது.

இதனால் அவர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

பிறகு 50 ஆண்டுகள் கழித்து சந்தர்ப்பம் வாய்த்த போது, முன்னாள் நண்பரை சுட்டுக் கொன்று எரிக்சன் பகையைத் தீர்த்துக் கொண்டார்.

இந்நிலையில் வழக்கறிஞர்களுக்கு இடையில் காணப்பட்ட இணக்கத்தால் எரிக்சனின் மரண தண்டனை தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவம், பழைய மனக்காயம் எவ்வளவு ஆபத்தான விளைவுகளில் போய் முடியும் என்பதற்கு ஓர் உதாரணமாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!