Latestமலேசியா

HRD Corp-பின் புதிய தலைமை செயலதிகாரியாக டத்தோ முஹமட் ஷமீர் அப்துல் அசிஸ் நியமனம்

3புத்ராஜெயா, ஜனவரி-24-மனித வள மேம்பாட்டு கழகமான HRD Corp-பின் புதிய தலைமை செயலதிகாரியாக (CEO) டத்தோ முஹமட் ஷாமிர் அப்துல் அசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

6 மாதங்களாக அப்பதவியில் இருந்த Dr Syed Alwi Mohamed Sultan-னுக்கு பதிலாக, ஷாமிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

புத்ராஜெயாவில் உள்ள மனிதவள அமைச்சான KESUMA-வில் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் முன்னிலையில் பதவி ஒப்படைப்பு சடங்கு நடைபெற்றது.

இப்புதிய நியமனம், நாட்டின் திறன் மேம்பாடு, தொழிலாளர் பயிற்சி மற்றும் மனித வள வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என ரமணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதற்கு முன், ஷாமிர் அமானா இக்தியார் மலேசியா (AIM) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார்.

அவரது தலைமையில், அந்நிறுவனம் சிறந்த நிர்வாக திறன் மற்றும் உயர்ந்த கடன் மீட்பு விகிதத்தை பதிவுச் செய்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில், பதவி முடிந்துள்ள Dr Syed Alwi-வியின் சேவைக்கும் KESUMA நன்றித் தெரிவித்துக் கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!