
கோத்தா கினாபாலு, செப்டம்பர்-16,
சபாவில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் 5 சிறார்களும் அடங்கும்.
நேற்று காலை கோத்தா கினாபாலுவில் உள்ள Inanam, Kampung Cenderakasih-வில் 7 பேர் நிலச்சரிவில் புதையுண்டனர்.
Papar மற்றும் Marahang Tuntul பகுதிகளில் மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.
Penampang-கில் 97 வயது முதியவர் உயிரிழந்தார்.
வெள்ளத்தால் 5 மாவட்டங்களில் 1,600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
15 தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆயிரம் ரிங்கிட் அவசர நிவாரணம் வழங்கப்படும்.
அதே சமயம் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10,000 ரிங்கிட் உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு 11 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ள நிலையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கூடுதலாக 10 மில்லியன் ரிங்கிட் நிதியை அங்கீகரித்துள்ளார்.
கட்டட இடிபாடுகாளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாநில அளவிலான இன்றைய மலேசிய தின கொண்டாட்டத்தை இரத்துச் செய்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் முழு கவனம் செலுத்துவதாக முதல்வர் Datuk Seri Hajiji Noor தெரிவித்துள்ளார்.