
கோலாலம்பூர், டிச 31 – DAP தனது கொள்கைகளில் உறுதியாக இருப்பதை உறுதி செய்வதோடு , 2026 ஆம் ஆண்டில் நியாயத்தோடு அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதி செய்வதாக அக்கட்சியின் தலைமைச் செயலாளர் அந்தோனி லோக் (Anthony Loke) தெரிவித்திருக்கிறார்.
கட்சி நேர்மையுடன் தொடர்ந்து பணியாற்றும் என்பதோடு , பொது நலனுடன் இணைந்த முடிவுகளை எடுப்பதுடன் , பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுவதற்கும் உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.
நல்லாட்சி, நேர்மை மற்றும் மக்களின் உண்மையான தேவைகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளைப் பின்பற்றுதல் ஆகியவை நாட்டின் வலுவான எதிர்காலத்திற்கு அடித்தளம் என DAP நம்புவதாக தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் போக்குவரத்து அமைச்சருமான அந்தோனி லோக் தெரிவித்தார்.
மலேசியர்கள் அதிக வாழ்க்கைச் செலவுகள் போன்ற பணவீக்கத்தால் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதையும், வணிகங்கள் அதிக செலவுகளைச் சமாளிப்பதையும் அரசாங்கம் அறிந்திருப்பதாகக் கூறினார்.
மேலும் சுயநலத்திற்காக சமூகத்தைப் பிரிப்பதற்குப் பதிலாக பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தும் ஒரு பொறுப்பான அரசியல் வடிவத்திற்கும் Anthony Loke அழைப்பு விடுத்தார்.



