Latestஉலகம்

காசா போரை முடிவுக்குக் கொண்டு வரும் அமெரிக்காவின் 20-அம்சத் திட்டத்துக்கு நெத்தன்யாஹு இணக்கம்; ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், செப்டம்பர்-30,

காசா மோதலை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முன்வைத்த 20-அம்ச அமைதி திட்டத்தை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு ஏற்றுக் கொண்டுள்ளதாக, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இரு தரப்பும் ஒப்புக் கொண்டவுடன், போர் உடனடியாக முடிவுக்கு வரும், இஸ்ரேல் படைகள் பின்வாங்கும் அதே சமயம் பிணையாளிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும், ஓர் அனைத்துலக தற்கலிக பாதுகாப்புப் படையை அமைப்பது, காசாவை நிர்வகிக்க ட்ரம்ப் தலைமையில் இடைக்கலால ஆட்சி அமைப்பு உள்ளிட்டவை அந்த 20-அம்சங்ளில் அடங்கும்.

தவிர, ஹமாஸ் முழுமையாக ஆயுதங்களை கைவிட வேண்டும், அமைதி வழிக்குத் திரும்பத் தயாராக இருப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும், காசா மக்களை வெளியேற்றாமல் அங்கிருந்தே அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவது ஆகிய பரிந்துரைகளும் உள்ளன.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், இத்திட்டம் பல தசாப்தங்களாக நீடித்து வரும் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்து, மத்திய கிழக்கில் புதிய பாதுகாப்பு, அமைதி மற்றும் வளமான அத்தியாயத்தைத் தொடங்கும் எனக் கூறினார்.

நெதன்யாஹுவின் நம்பிக்கைக்கும் ஒத்துழைப்புக்கும் அவர் நன்றியும் தெரிவித்தார்.

அதேவேளை, ஹமாஸ் அமைப்பும் இந்த அமைதித் திட்டத்தை ஏற்க வேண்டும்; மறுத்தால், ஹமாஸை முழுமையாக அழிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு வழங்கும் என ட்ரம்ப் எச்சரித்தார்.

வெள்ளை மாளிகை இந்த உடன்பாட்டை வட்டார நிலைத்தன்மைக்கான முக்கிய முன்னேற்றமாகக் குறிப்பிட்டாலும், இந்த அமைத்தி திட்டத்திற்கு பரவலான ஒப்புதல் கிடைப்பது இன்னும் சவாலாகவே உள்ளது.

3 ஆண்டுகளாக நீடிக்கும் இஸ்ரேலியத் தாக்குதலில் இதுவரை 66,000 பேருக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!