
சிரம்பான், ஜூலை-2 – பொது இடங்களில் மரு அந்தினால் 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்க, நெகிரி செம்பிலான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் அவ்வாறு கூறியுள்ளார்.
பொது கேளிக்கைப் பூங்காக்கள், சிறார் விளையாட்டு மைதானங்கள், கடற்கரை போன்ற இடங்களில், குறிப்பாக இரவு நேரங்களில் வெட்டவெளியில் மது அருந்துவோர் குறித்த புகார்கள் அதிகரித்து வருகின்றன.
இதுநாள் வரை எச்சரிக்கை மட்டுமே கொடுத்து வந்தோம்; இனி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்; அபராதமும் அதிலடங்கும் என்றார் அவர்.
அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு; அதைத் தான் அமுல்படுத்தப் போகிறோம் என அவர் சொன்னார்.
குடும்பங்கள் வந்துபோகும் பொது இடங்கள், ஒரு சிலரின் ஒழுக்கக்கேடான நடத்தையால் கெடுக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்வதற்கு இந்த நடவடிக்கை அவசியம் என டத்தோ ஸ்ரீ அமினுடின் கூறினார்.