Latestசிங்கப்பூர்மலேசியா
சிங்கப்பூரில் இனி மின் சிகரெட்டு பயம்பாடு போதைப்பொருளுக்கு இணையான குற்றம்- சிங்கப்பூர் பிரதமர்

சிங்கப்பூர், ஆகஸ்ட் 18 – மின் சிகரெட்டுகள் அல்லது வேப்பிங் பயன்பாட்டை போதைப்பொருளுக்கு இணையான பிரச்சினையாகக் கருதி, கடுமையான தண்டனைகள் நிர்ணயிக்கப்படுமென்று சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
பெரும்பாலான வேப்பிங் சிகரெட்டுகளில் எட்டோமிடேட் போன்ற ஆபத்தான போதைப்பொருள்கள் இருப்பதால் இந்த நிலைமை எதிர்காலத்தில் மேலும் மோசமடையக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மின் சிகரெட்டுகளைப் புகைப்பவர்கள் அதனை நிறுத்துவதற்கு அரசாங்கம் வழி அமைக்கும் என்றும் மறுவாழ்வு அளிக்கும் திட்டங்களை முன்னெடுக்கும் என்றும் அறியப்படுகின்றது.
பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் நாடு தழுவிய அளவில் அமலாக்கத்தை அரசாங்கம் தீவிரப்படுத்தும் என்றும், ஒரு பெரிய பொதுக் கல்வி பிரச்சாரத்தைத் தொடங்கும் என்றும் வோங் மேலும் கூறினார்.