
புத்ராஜெயா, அக்டோபர்-17,
இந்தியச் சமூகத்துக்கான தர்மா மடானி திட்டத்தின் கீழ் ஆலயங்களை வலுப்படுத்தும் திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
அத்திட்ட அமுலாக்கம், மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா மூலம் முன்னெடுக்கப்படும் என தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவ்வகையில், இவ்வாண்டுக்கான விண்ணப்பங்கள் இன்று சனிக்கிழமை அக்டோபர் 18 நள்ளிரவு 12 மணி முதல் நவம்பர் 3 இரவு 11.59 மணி வரை திறந்திருக்கும்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்து கோவில்களும் வழிபாட்டுத் தலங்களும் இந்த RM20,000 நிதி கேட்டு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள், தர்மா மடானி திட்டத்தின் வழிகாட்டுதல்களைப் படித்து, விண்ணப்பங்கள் முழுமையாகவும் நிபந்தனைகளை பூர்த்திச் செய்யும் வகையிலும் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும் தகவல்களுக்கு, www.mitra.gov.my மற்றும் MITRA-வின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களைப் பார்வையிடலாம்.
தர்மா மடானி திட்டத்தின் மூலம் 1,000 இந்து கோயில்களுக்கு தலா RM20,000 மானியம் வழங்கும் திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்தியர்கள் குறிப்பாக B40 வர்கத்தினரை வலுப்படுத்தும் முயற்சியாக மித்ராவின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் 5 முன்னெடுப்புகளில் இதுவும் ஒன்றாகும்.