
கோலாலலம்பூர், செப்டம்பர் 11 – இன்று அதிகாலை கம்போங் ஸ்ரீ இண்டாவிலுள்ள ஒற்றை மாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிள்ளாக்கியுள்ளது.
சுமார் 80 சதவீதம் வீடு தீயில் சாம்பலான நிலையில்தான், தீ முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று தீயணைப்பு துறை தெரிவித்தது.
மேலும், சம்பவத்தில் வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களும் தீக்கிரையாகின என்று அறியப்படுகின்றது.
இந்நிலையில் இந்த தீ விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மேல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.