
கோலாலம்பூர் செப்டம்பர் 15 – நேற்றிரவு கோலாலும்பூர் ஜாலான் ஹாங் துவா ஆஃப், ஜாலான் இம்பி சாலையில் (Jalan Hang Tuah Off, Jalam Imbi), நான்கு கார்கள் மற்றும் இரண்டு சுற்றுலா பேருந்துகள் மோதிய சாலை விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்தவுடனேயே சம்பவ இடத்திற்கு 13 வீரர்கள் FRT வாகனத்துடன் களமிறங்கினர் என்று செயல்பாட்டு தளபதி செ. மொஹ்ட் சுலெஹுத்தீன் செ. ஜூசோ (Che Mohd Solehuddin Che Jusoh) கூறினார்.
இந்த விபத்தில் இரு ஆண்கள், இரு சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்த அனைவரும் மேல் சிகிச்சைக்காக பின்பு கோலாலம்பூர் மருத்துவமனைக்கு (HKL) அனுப்பப்பட்டுள்ள நிலையில் போலீசார் மேல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.