
கோலாலம்பூர், நவம்பர் 11 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய (KLIA) டெர்மினல் 2-ல், சுங்கத்துறை மற்றும் மலேசிய எல்லை பாதுகாப்பு நிறுவன (MCBA) அதிகாரிகள், சுமார் 7 கிலோ கிராம் ‘கெட்டமினை’ வைத்திருந்த சீன நாட்டு நபரை கடந்த அக்டோபர் 28 ஆம் தேதியன்று கைது செய்தனர்.
சந்தேகநபரின் பைகளை ஸ்கேன் செய்தபோது சந்தேகத்திற்கிடமான படங்கள் தெரிய வந்ததால், அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொண்டனர். அந்நிலையில் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் எடை சுமார் 6.88 கிலோ கிராம் எனவும் அதன் மதிப்பு சுமார் 344,000 ரிங்கிட் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் பிரம்படிகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.



