Latestமலேசியா

உள்ளூர் கலைஞர்களுக்கு உதவியமைக்காக ஏ.ஆர். ரஹ்மானைப் பாராட்டிய சிங்கப்பூர் அதிபர் தர்மன்

சிங்கப்பூர், ஜூன்-4 – சிங்கப்பூர் கலைஞர்களுடன் பணியாற்றியமைக்காக ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை, அக்குடியரசின் அதிபர் தர்மன் சண்முகரத்தனம் பாராட்டியுள்ளார்.

ரஹ்மானை நேரில் சந்தித்த புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் தர்மன் பகிர்ந்துள்ளார்.

சிங்கை கலைஞர்களுக்கும் வாய்ப்பளித்து அவர்களின் திறமைகளை ரஹ்மான் அங்கீகரித்துள்ளார்.

ராப் இசைப் பாடகர் இணையான Lady Kash – Krissy, பாடகரும் இசைக் கலைஞருமான Shabir, ராப் பாடகர் Yung Raja போன்றோருக்கு ரஹ்மான் அரிய வாய்ப்பளித்துள்ளதை அதிபர் தர்மன் சுட்டிக் காட்டினார்.

1980-களில் இந்தியாவுக்கு வெளியே ரஹ்மான் பயணித்த முதல் நாடு சிங்கப்பூர் என்றும், உள்ளூர் கடைகளிலிருந்து அவர் இசைக்கருவிகளை வாங்கிச் சென்றார் என்பதையும் தர்மன் நினைவுக் கூர்ந்தார்.

தானே எழுதி, இயக்கி, இணைந்து தயாரித்துள்ள Le Musk எனும் மெய்நிகர் (Virtual Reality) படத்தின் பிரீமியர் காட்சிக்காக, ரஹ்மான் அண்மையில் சிங்கப்பூர் சென்றிருந்தார்.

அப்படம் ஆகஸ்ட் 12 வரை Golden Village Suntec City-
யில் திரையிடப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!