Latestமலேசியா

சிரம்பானில் பள்ளி வேன் மோதி 6 வயது குழந்தை காயம்

சிரம்பான், ஆகஸ்ட்-8 – சிரம்பானில் தன்னை வீட்டில் இறக்கி விட்ட பள்ளி வேனாலேயே மோதப்பட்டு 6 வயது குழந்தை காயமடைந்துள்ளது.

Taman Mantau Indah 3-வில் திங்கட்கிழமை காலை 11.50 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.

பாலர் பள்ளியிலிருந்து குழந்தைகளை ஏற்றிக்கொண்டு திரும்பிய அந்த Kia Pregio வேன், சம்பந்தப்பட்ட குழந்தையை பராமரிப்பாளர் வீட்டில் இறக்குவதற்காக நின்றது.

வேனிலிருந்து இறங்கிய குழந்தை, பராமரிப்பாளர் வீட்டுக்குச் செல்ல சாலையைக் கடக்க முயன்ற போது, அதை கவனிக்காமல் ஓட்டுநர் வேனை எடுத்ததால், முன்னே இருந்த குழந்தை மோதப்பட்டு கீழே விழுந்தது.

இதனால் தலை, உடம்பு, கை மற்றும் கால்களில் காயமேற்பட்டு, துவாங்கு ஜாஃபார் மருத்துவமனைக்குக் குழந்தை கொண்டுச் செல்லப்பட்டது.

வேன் ஓட்டுநரான 38 வயது மாது விசாரிக்கப்படுகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!