
நியூ யோர்க், மே-3 – Meta நிறுவனத்தின் கீழுள்ள Instagram, Facebook, WhatsApp ஆகிய அனைத்து சமூக ஊடகங்களும் விரைவில் ‘Digital Companian’ என்ற AI chatbot செயலியை கொண்டிருக்கும்.
வயது குறைந்த பதின்ம வயதினர், சிறார்கள் உள்ளிட்டோருடன் இது பாலியல் உரையாடலை மேற்கொள்ளும்.
இந்த chatbot-டே சமூக ஊடகங்களின் எதிர்காலமாக இருக்குமென Meta தலைவர் மார்க் சக்கர்பெர்க் நம்புவதாக WSJ எனப்படும் Wall Street Journal கூறுகிறது.
இந்த chatbot செயலியின் செல்வாக்கைக் காட்டுவதற்றாக, அவசர அவசரமாக, கிறிஸ்டன் பெல், ஜூடி டென்ச் மற்றும் மல்யுத்த வீரராக இருந்து நடிகரான ஜான் சேனா போன்ற பிரபலங்களுடன் Meta கைகோர்த்துள்ளது.
இந்த பிரபலங்கள் chatbot-டுகாக தங்கள் குரல்களைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்றாலும், பிரபலங்களின் குரல்கள் பாலியல் உரையாடல்களுக்குப் பயன்படுத்தப்படாது என Meta உறுதியளித்துள்ளதாக, விஷயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
Meta-வின் அதிகாரப்பூர்வ AI உதவியாளரான Meta AI மற்றும் பயனர்களால் உருவாக்கப்பட்ட ஏராளமான chatbot-கள், பாலியல் ரீதியான உரையாடல்களில் ஈடுபடுமென WSJ கூறியுள்ளது.
ஆனால், Meta-வின் உத்தரவாதத்திற்கு மாறாக, பிரபலங்களின் குரல்களைப் பயன்படுத்தும் bot-களும் பாலியல் அரட்டைகளில் ஈடுபட தயாராக இருப்பதாக WSJ தெரிவிக்கிறது.
ஏற்கனவே இணையம் பாதுகாப்பாக இல்லையென்ற கவலை நிலவுகிறது; இதில் டிஜிட்டல் பாலியல் உரையாடல் வேறு வந்தால், எதில் போய் முடியுமோ என வலைத்தளங்களில் பேசிக் கொள்கின்றனர்.