Latestஉலகம்

விண்ணில் செயல் இழந்த துணைக்கோளம் பூமியில் விழுந்தது

பிரான்ஸ், பிப்ரவரி-23 கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக விண்வெளியில் இருந்த துணைக்கோளமொன்று தனது ஆயுட்காலம் முடிந்து பூமியில் விழுந்திருக்கின்றது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ESA) -வுக்குச் சொந்தமான ‘Grandfather’ Satellite ERS-2 எனும் அத்துணைக் கோளம், மலேசிய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 3.17 மணியளவில் வளிமண்டலத்தில் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆயுட்காலம் முடிந்து தனது சுற்றுப் பாதையை விட்டு விலகிய ERS-2 இம்மாத இறுதியில் பூமியின் மீது விழும் அபாயம் இருப்பதாக விண்வெளி விஞ்ஞானிகள் ஏற்கனவே கோடி காட்டியிருந்தனர்.

எனினும், செயலிழந்து விட்டதால் அதனைக் கட்டுப்படுத்த முடியாது; அதனால் அது எங்கே விழும் என்பதைக் கணிக்க முடியாது. இருந்தாலும் ஐரோப்பியக் கடல் பகுதிகளில் அதன் உடைந்தப் பாகங்கள் விழலாம் என விஞ்ஞானிகள் கூறினர்.

பெருமளவிலான பாகங்கள் வரும் வழியிலேயே எரிந்து சாம்பலாகி விடும்; சில பாகங்கள் வளிமண்டலத்தைத் தாண்டி பூமியில் விழும் என அவர்கள் கூறியிருந்தனர்.Ozon படலத்தைக் கண்காணிப்பதற்காக இந்த ERS-2 துணைக் கோளம் 1995-ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது.

பிறகு 2011-ஆம் ஆண்டு அதன் சேவை நிறுத்தப்பட்டு, அன்றில் இருந்து அது பூமியை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!