Latestமலேசியா

5 ஆண்டுகளில் 1. 34 பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 14,000-த்திற்கும் மேலான முதலீட்டு மோசடிகள்

கோலாலம்பூர், பிப் 23 – 2019 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம்ஆண்டுவரை 5 ஆண்டு காலத்தில் 14,488 மோசடிகள் சம்பந்தப்பட்ட மோசடிகளில் 1.34 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றவியல் துறையின் இயக்குநர் கமிஷனர் டத்தோஸ்ரீ ரம்லி மொஹமட் யூசுப் தெரிவித்திருக்கிறார். முதலீடுகள் பெயரைக் கூறி நடைபெற்றுவரும் பண மோசடி குற்றங்கள் அதிகாரித்து வருவதால் இக்குற்றச்செயல்களை துடைத்தொழிப்பதற்கு மலேசிய பங்கு ஆணையத்தோடு போலீஸ் ஒத்துழைத்து வருகிறது. நேற்று இது தொடர்பாக போலீசிற்கும் மலேசிய பங்கு ஆணையத்தின் அமலாக்கத்துறையின் இயக்குநர் Budiman Lutfi Mohamad ஆகியோருக்குமிடையே கலந்துரையடல் நடைபெற்றதாக ரம்லி கூறினார்.

எந்தவொரு முதலீட்டு திட்டங்கள் குறித்தும் அதன் உண்மை நிலையை பொதுமக்கள் கண்டறிவற்காக செயல் திட்ட குழு ஒன்று அமைப்பது தொடர்பில் புரிந்துணர்வு காணப்பட்டுள்ளது. மலேசிய பங்கு ஆணையம் ஏற்கனவே முதலீடு பரிசோதனை எனற பெயரில் அகப்பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளது. தகவல் நிபுணத்துவம், விசதாரணை மற்றும ஒத்துழைப்பு போன்ற விவகாரங்களில் தொடர்ந்து தகவல்களை பகிர்ந்து கொள்வதிலும் இரு தரப்பினரிமையே இணக்கம் காணப்பட்டிருப்பதாக ரம்லி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!