Latestமலேசியா

பாலியல் காட்சிகள் உட்பட தவறான நன்னெறி உள்ளடக்கத்தை கொண்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்படும்

கோலாலம்பூர், டிச 12 – பாலியல் காட்சிகள் உட்பட பொது நன்னெறிக்கு எதிரான உள்ளடக்கத்தைக் கொண்ட சமூக வலைத்தளங்களை அரசாங்கம் தொடர்ந்து முடக்கும் என தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் ஃபஹ்மி பாட்ஜில் தெரிவித்திருக்கிறார்.

மேலும், பாலியலை ஊக்குவிக்கும் பொருட்கள் மற்றும் ஒழுக்கமற்ற பாலியல் நடைமுறைகளைக் கொண்ட உள்ளடக்கத்தை கொண்ட சமூக வலைத்தளங்களும் முடக்கப்படும் என அவர் கூறினார்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை இத்தகைய 7,097 வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்கள் தவறாக பயன்படுத்துவற்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்றும் ஃபஹ்மி பாட்ஜில் தெரிவிவித்தார்.

பாலியல், லெஸ்பியன் ஓரினச்சேர்க்கை, திருநங்கைகள் உள்ளடக்கங்கள் மற்றும் விளம்பரங்கள் உட்பட நமது நாட்டின் சட்டங்களை மீறக்கூடிய பல்வேறு சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம் என ஃபஹ்மி பாட்ஜில் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!